தொடர் கனமழை எதிரொலி: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வங்கக் கடலில் திங்கள்கிழமை உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து செவ்வாய்க்கிழமை தெற்கு…

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வங்கக் கடலில் திங்கள்கிழமை உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து செவ்வாய்க்கிழமை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் நவ.30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். மேலும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு, அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும்.

வள்ளுவர் கோட்டம், வடபழனி, நெல்சன் மாணிக்கம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் பேருந்து என பயணம் செய்யும் வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் தொடர் மழை பெய்து வருவதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் மேடு பள்ளங்கள் தெரியாமல் பொதுமக்கள் தவறி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.