முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் – கராத்தே தியாகராஜன்

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக , அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார் எனக் கூறினார்.

திமுக நிச்சயம் தோல்வி அடையும் என்றும், மேயர் பதவியில் சரிவர செயல்படாத மு.க.ஸ்டாலின், முதல்வர் பதவியில், எப்படி செயல்படுவார் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக, கே.எஸ் அழகிரி தேவையில்லாமல் பேசி வருவதாகக் கூறிய கராத்தே தியாகராஜன், ஆர்.எஸ்.எஸ் ஒரு சமுதாய இயக்கம், அதை ஏற்றுக் கொள்கின்றேன் என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும், என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

நடிகர் கமல்ஹாசனை காண கூட்டம் கூடும், ஆனால் அது வாக்காக மாறாது; அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து!

Saravana

பட்ஜெட் திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா? பிரேமலதா கேள்வி

Nandhakumar

’சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’: வைரலாகும் ’ஜகமே தந்திரம்’ டிரைலர்!

Karthick