கிருஷ்ணகிரியில் பெரியார் சிலையை தீயிட்டு கொளுத்தி அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி அடுத்த கத்தாளமேடு பகுதியில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அவமதிக்கும் விதமாக அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நேற்று நள்ளிரவில் தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக பெரியார் சிலையை சுத்தம் செய்து வர்ணம் பூசி புதுப்பித்தனர்.
இந்த நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் தீ வைக்கப்பட்ட பெரியார் சிலை முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினர்.