பழங்காலத்து சீன கலைப் பொருளான சிறப்பு பீங்கான் கிண்ணம் ஒன்று ரூ.3.6 கோடிக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கிலுள்ள சோதீபைஸ் ஏல நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள, இந்த பீங்கான் கிண்னம் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் ஆறு அங்குலத்தில் உள்ளது. உலகத்திலேயே இதுபோன்ற அரிய பிங்கான் கிண்ணங்கள் 7 மட்டுமே உள்ளன. மார்ச் 17ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.
கடந்த ஆண்டு நியூ ஹேவன் பகுதியிலுள்ள சந்தையில் பழங்கால ஆர்வலர் ஒருவர் 35 அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கி இருக்கிறார். பின்னர் இந்த சிறப்புமிக்க பொருளின் மதிப்பை அறிந்துகொள்ள சோதேபிஸின் நிறுவனத்திற்கு இதுதொடர்பான தகவலையும், கிண்ணத்தின் புகைப்படத்தையும் அனுப்பியுள்ளார். அங்கு வந்து ஆய்வு செய்த கலை வல்லுனர்கள், இது 1400 களில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு கிண்ணம், இவை தொடுவதற்கு மிகவும் மென்மையாக இருந்தது, அதன் மெருகூட்டல் மென்மையானது மற்றும் வண்ணமும் வடிவமைப்புகளும் அந்தக் காலத்தின் தனித்துவமானவை கூறினர்.
மேலும், 1400-களின் மிங் வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளரான யோங்கிள் பேரரசரின் ஆட்சிக் காலத்தில் இந்த கிண்ணம் இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், இது யோங்கிள் நீதிமன்றத்திற்காக செய்யப்பட்டது. இது மிகச்சிறந்த யோங்கிள் தயாரிப்பு என்று சோதேபிஸ் கூறுகிறது. இதுதவிர இந்த சிறப்பு கிண்ணம் உலகில் 6 இருப்பதாக அறியப்படுவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை அருங்காட்சியகங்களில் உள்ளன என்றும் மெக்டீர் கூறினார்.
தைவானின் தைப்பேயில் உள்ள தேசிய அரண்மனை அருங்காட்சியகத்தில் இரண்டு, லண்டனில் உள்ள அருங்காட்சியகங்களில் இரண்டு மற்றும் தெஹ்ரானில் உள்ள ஈரானின் தேசிய அருங்காட்சியகத்தில் ஒன்று உள்ளன என்று சோதேபிஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் அறியப்பட்ட இதுபோன்ற ஏழு சிறப்பு கிண்ணங்களில் ஒன்றான இதை சோதேபிஸ் ஏல நிறுவனம் மார்ச் 17 அன்று நியூயார்க்கில் ஏலம் விடப்படும் என தெரிவித்துள்ளது.







