முக்கியச் செய்திகள் இந்தியா

சிபிஎஸ்இ தேர்வு குறித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு காங்கிரஸ் வரவேற்பு!

கொரோனா 2-வது அலையின் தீவிர பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ-யின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் 12-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதாகவும் அறிவித்த மத்திய அரசின் முடிவிற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு அளித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால்,
சிபிஎஸ்இ-யின் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலிவுறுத்தி வந்தன.

இந்நிலையில் இன்று, சிபிஎஸ்இ பொதுத்தேர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து சிபிஎஸ்இ-யில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து செய்தும் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்தவை ஒத்திவைத்தும் மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவித்தது.

இந்நிலையில், பிரமதர் நரேந்திர மோடியின் இந்த முடிவிக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,

“ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் அறிவுரையைக் கேட்டு பிரதமர் மோடி செயல்பட்டதிற்கு பாராட்டுகள் வெல் டன் மோடி ஜி.. நாட்டு மக்களின் நலனுக்காக நாம் ஒற்றுமையாக செயல்படுவது நமது ஜனநாயக கடமை.” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில், சிபிஎஸ்இ-யின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதிற்கு மகிழ்ச்சி, ஆனால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும்.” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement:

Related posts

ஜூன் மாதம் புதிய தலைவர்: காங்கிரஸ் காரிய கமிட்டியில் முடிவு!

Saravana

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,672 பேருக்கு கொரோனா!

Karthick

ஒரே நேரத்தில் 2 டோஸ் : பெண் பரபரப்பு புகார் !

Karthick