வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள இடத்தில் மடிக்கணினியுடன் மூவருக்கு அனுமதி : வேல்முருகன் குற்றச்சாட்டு!

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள இடத்தில் குறைபாடு உள்ளதாக வேல்முருகன் குற்றம்சாட்டினார். சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக  தவாக தலைவர் வேல்முருகன் போட்டியிட்டார். கடந்த 6ம் தேதி வாக்குப் பதிவு முடிந்த…

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள இடத்தில் குறைபாடு உள்ளதாக வேல்முருகன் குற்றம்சாட்டினார்.

சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக  தவாக தலைவர் வேல்முருகன் போட்டியிட்டார். கடந்த 6ம் தேதி வாக்குப் பதிவு முடிந்த நிலையில் பண்ருட்டி தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், பண்ருட்டி சட்டமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அண்ணா பொறியியல் கல்லூரியில் மடிக்கணினி அறிவியல் தொடர்புடைய  3 பேருக்கு அனுமதி பாஸ் வழங்கி உள்ளதாக வேல்முருகன் சுட்டிக்காட்டினார்.  

“இதுதொடர்பாக பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தோம்.  இணைய வழி கல்விக்காக மடிக்கணினியுடன் 3 பேருக்கு அனுமதி அளித்ததாக தேர்தல் நடத்தும் அலுவலர்  கூறுகிறார்.  இது தொடர்பாக அனுமதி அளித்தது யார் என தெரிவிக்க வேண்டும். தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள இடத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார். மேலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவான காவல்துறை உயரதிகாரிகளும் முறைகேடு செய்வதாகவும் குற்றச்சாட்டினார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.