முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளரின் மகள் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் மகள் திவ்யா ராவ், மலைவாழ் மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ், கொரோனா அறிகுறியால் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனால் அவருக்கு ஆதரவாக அவரது மகள் திவ்யா ராவ், பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

தொகுதிக்கு உட்பட்ட தாணிப்பாறை, பட்டுப்பூச்சி, அத்திக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திவ்யா ராவிற்கு மலைவாழ் மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அவர்களிடம் பேசிய திவ்யா ராவ், சுடுகாட்டுப் பாதை அமைப்பது உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Advertisement:
SHARE

Related posts

புதிய போர்விமான உற்பத்தி தொழிற்சாலையைத் திறந்து வைத்தார் ராஜ்நாத் சிங்

Jayapriya

வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்தது: 5 வாக்காளர்கள் படுகாயம்!

Gayathri Venkatesan

தமிழ்நாட்டிற்கு 33.9 டிஎம்சி தண்ணீர்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

Ezhilarasan