அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரித்த கொரோனா வாக்ஸினை இளைர்கள் வைத்து பயன்படுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்கா பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன், தயாரித்த கொரோனா தடுப்பூசியை, 16 மற்றும் 17 வயது இளைஞர்களை பயன்படுத்த பரிசோதனை செய்து வருகிறார்கள். முதற்கட்டமாக 18,19 வயதில் இருக்கும் இளைஞர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவர்களின் (இளைர்கள் 18,19) பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர், 12 வயதில் இருந்து 15 சிறுவர்களுக்கு அந்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி பரிசோதனைக்கு முதல்முறையாக உட்படுத்தப்பட்ட இளைஞர்கள் பிரிட்டன், ஸ்பைன் நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களை தொடர்ந்து பிரேசில், அர்ஜென்டினா இளைஞர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை செய்யப்படவுள்ளது. அதையடுத்து அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி எடுத்துக் கொள்ள பதிவு செய்யப்பட்ட இளைஞர்களும் பின்வரும் நாட்களில் பரிசோதனை எடுக்கவுள்ளனர்.
இந்த பரிசோதனையானது தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதுபடுத்துவதற்காக நிகழ்த்தப்படுகிறது. தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டு மூன்று மாதம் இடைவேளிக்கு பிறகு இரண்டாவத தவணை செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







