பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை நமீதா பரப்புரை!

திருவையாறு பாஜக வேட்பாளர்களுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட நடிகை நமீதா, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை பற்றி கூறி வாக்கு சேகரித்தார். தஞ்சை மாவட்டம் திருவையாறு பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து,…

திருவையாறு பாஜக வேட்பாளர்களுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட நடிகை நமீதா, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை பற்றி கூறி வாக்கு சேகரித்தார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து, வல்லம் புதூரில் நடிகை நமீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அரசின் இலவச கேஸ் சிலிண்டர் மற்றும் இலவச கேபிள் சேவை மூலம் ஏராளமானோர் பயன்பெறுவர் எனக் கூறினார்.

மேலும், வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர், குடும்ப தலைவிகளுக்கு 1,500 ரூபாய் பணம், இலவச கேபிள் இணைப்பு போன்ற, அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை பற்றி கூறி வாக்கு சேகரித்தார். அத்துடன் பாஜகவின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, தான் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.