இன்று முதல் 7-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தது புதுச்சேரி அரசு!

புதுச்சேரியில் வரும் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது, தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 7 மணி முதல் வரும் 7-ம் தேதி காலை 7மணி வரை 144 தடை உத்தரவு…

புதுச்சேரியில் வரும் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது, தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 7 மணி முதல் வரும் 7-ம் தேதி காலை 7மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது புதுச்சேரி அரசு.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் சூறாவளித் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் இதுவரை 42 கோடியே 12 ரூபாய் மதிப்பிலான பணம், நகை மற்றும் பரிசுப் பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விதிமீறல் காரணமாக 43 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய அவர், தேர்தலில் எந்த வித அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் கூறினார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், இன்று மாலை 7 மணி முதல் வரும் 7 ஆம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன பேரணி நடத்துவது, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது மற்றும் கூட்டம் கூடுவது போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.