உதயநிதி ஸ்டாலினைப் பற்றிப் பேசினால் மு.க. ஸ்டாலினுக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது என நெல்லையில் நடந்த பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார்.
திருநெல்வேலியில் இன்று தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமித்ஷா பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “எப்போதும் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலனிற்காகக் கவலைப்படுகிறார்.
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் எப்போதும் தனது மகனைப் பற்றியே கவலைப்படுகிறார்” விமர்சித்தார். மேலும் பேசிய அவர் “பாஜக- அதிமுக எப்போதும் தமிழகத்திற்காகவே பாடுபடுகிறது, ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி குடும்பத்திற்காகவே பாடுபடுகிறது” என் விமர்சனம் செய்துள்ளார்.







