தமிழகம் செய்திகள்

ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்

தூத்துக்குடி மாவட்டம், காமராஜ் கல்லூரி மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

கருங்குளம் அருகே தாமிரபரணி கரை பகுதியில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில், மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ் தலைமையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கான முதற்கட்ட பணியாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் நடந்து முடிந்தது. இதில் ஏராளமான பழங்கால மனிதனின் வாழ்வியல் பறைசாற்றும் வண்ணம், ஏராளமான
பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போது அதனை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும் இந்த அகழாய்வு பணியில் பழங்கால மனிதர்களின் வாழ்ந்த பகுதிகளை கண்டறிய ஆய்வாளர் எத்தீஸ் குமார் தலைமையில் திருக்கோளூரில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக மூன்றாம் ஆண்டு இளங்கலை தமிழ் துறை சேர்ந்த 40 மாணவர்கள் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை பார்வையிட்டனர்.

இதனையும் படியுங்கள்: வேங்கை வயல் விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

 

 

அவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆய்வுப் பணிகள் குறித்தும், அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கமளித்தார். இதில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் திலகவதி, முனைவர் ராஜலட்சுமி, முனைவர் சுப்புலட்சுமி, முனைவர் சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ஸ்ரீமரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போலி டாக்டர் பட்ட விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கோட்டூர்புரம் போலீசார் கேள்வி…

Web Editor

குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் – அமைச்சர்

Halley Karthik

திராவிட அரசியலின் அடையாளமாக மாறும் அண்ணா மேம்பாலம்

Janani