தமிழில் பராமரிக்கபட்ட கோப்புகள் : பாராட்டு பெற்ற ஊராட்சி ஒன்றிய உதவியாளர்

கோப்புகளை தமிழில் முறையாக பராமரிப்பு செய்து வந்ததாக சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உதவியாளருக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய…

கோப்புகளை தமிழில் முறையாக பராமரிப்பு செய்து வந்ததாக சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உதவியாளருக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய
அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் 27 துறைசார்ந்த அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.

ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அண்மைச் செய்தி: ”பட்டியலின மக்களை திமுக வஞ்சிக்கிறது” – அண்ணாமலை கண்டனம்

இதனை தொடர்ந்து சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோப்புகளை தமிழில் முறையாக பராமரிப்பு செய்து வந்ததற்காக, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உதவியாளர் அப்துல்லா பீவி என்பவருக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பாக 2000ரூபாய் ஊக்கப் பரிசு மற்றும்  சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதனையும் படியுங்கள்: புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்குவதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு

அதனை தலைவர் சரண்யா செந்தில்நாதன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா ஆகியோர் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் அப்துல்லா பீவியிடம் வழங்கி கௌரவப்படுத்தினர்.

எம்.ஸ்ரீமரகதம்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.