தீயில் கருகி ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் நாசம்

திருப்பூர் அருகே மூங்கில் கூடை விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல  லட்சம் மதிப்புள்ள, ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் எரிந்து நாசமடைந்தன. திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர்…

திருப்பூர் அருகே மூங்கில் கூடை விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல  லட்சம் மதிப்புள்ள, ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் எரிந்து நாசமடைந்தன.

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர்
திருப்பூர் நொய்யல் வீதி கஜலட்சுமி திரையரங்கம் அருகே, மூங்கில் மூலம்
செய்யப்படும் கூடைகளை பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்கியும், சொந்தமாகவும் மூங்கில் கூடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

இவ்வாறு தயாரிக்கப்படும் மற்றும் வெளியில் இருந்து வாங்கப்படும் மூங்கில் கூடைகளை நொய்யல் வீதியில் உள்ள கடையில் அடுக்கி வைத்துள்ளார்.

இதனையும் படியுங்கள் : அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்-நிம்மதி பெருமூச்சு விட்ட பயணிகள்

இந்த கடையிலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த மூங்கில் கூடைகளை எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த கடையில் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் எரிந்து சாம்பலானது.

இந்த தீ விபத்து குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

எம்.ஸ்ரீமரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.