முக்கியச் செய்திகள் தமிழகம்

”அண்ணா, பெரியார், கலைஞர் ஆகிய மூவருடைய திரட்சியாக ஆசைபடுகிறவர் மு.க.ஸ்டாலின்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சரை பாராட்டி கவிஞர் வைரமுத்து உரையாற்றினார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா இன்று (பிப்.28) நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 23 ஆண்டுக்கால வாழ்கையை சுயசரிதை நூலாக வெளியிடப்படும் என ஏற்கெனவே அவர் அறிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த புத்தகத்தை எம்.பி ராகுல் காந்தி வெளியிட்டதை தொடர்ந்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி, கனிமொழி எம்.பி, கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்தியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து தனது உரையை தொடங்கினார் கவிஞர் வைரமுத்து.

அவர் பேசியதாவது, ”இந்த மேடை ஒரு பெரிய மேடை, வெறும் அலங்கரத்தால் அல்ல, இந்தியா உயர்ந்து பார்க்கும் மேடையில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி, கனிமொழி எம்.பி, கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்தியராஜ் ஆகியோர் அமர்ந்திருப்பதால் இந்த மேடை உயர்ந்து இருக்கிறது.” என கூறினார்

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “ஒரு மாநிலத்தின் முதலமைசர், இத்தனை பெருமக்களை ஒன்று திரட்டி. நிலாக்களையும், நட்சத்திரங்களையும் ஒரே மேடையில் கூட்டியிருக்கிறார், எப்படி இவருக்கு இந்த ஆளுமை எப்படி இவருக்கு ஏற்பட்டது? என தோன்றியது. என்னு ஏற்பட்ட இந்த யோசனை உங்களுக்கும் இருப்பின் இந்த நூலை படித்தால் பதில் கிடைக்கும்.” என்று கூறினார்.

மேலும், “இந்த விஷயம் சாதரணமாக தோன்றியதல்ல, 1970ல் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை ஒரு இளைஞன் கொண்டாடுகிறார், அந்த மேடைக்கு யார் யார் வர வேண்டும் என்று அந்த இளைஞன் தீர்மானிக்கிறார். அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர், ஆந்திராவின் முதலமைச்சர் பிரம்மானந்த ரெட்டி, புதுச்சேரியின் முத்லமைச்சர் ஃபாரூக் இந்த மூன்று முதலமைச்சர்களையும் ஒரே மேடையில் ஒன்று கூட்டி ஒரு 17 வயது இளைஞன் விழா நடத்தினார். அந்த இளைஞனின் பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

செயல்படுவது, சிந்திப்பது, விரிந்து உரையாடுவது களம் காண்பது, என்பதெல்லாம் இவருக்கு பிறவி குணம், உதிரத்தில் ஊரிய குணம். அண்ணா, பெரியார், கலைஞர் ஆகிய மூன்று ஆளுமைகளையும் தனக்குள் வாங்கி நடைபோட வேண்டும் என்ற வேகம் அவருக்கு இருக்கிறது.

கடந்த 9 மாதங்களில் தமிழ்நாட்டை இந்த இந்தியாவே திரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறதே எப்படி? சாதனைகள் ஒன்றா இரண்டா.. அந்த சாதனைகளை சொல்வதற்கு நான் கலைஞரின் உவமையைத்தான் கடன் வாங்க வேண்டியிருக்கும், முதலமைசர் மு.க.ஸ்டாலின் சாதனைகளை சொல்ல வேண்டும் என்றால் ஆயிரம் நாவுடைய ஆதிஷேஷன் கூட, கம்பனிடம் ஒரு நாவை கடன் வாங்க வேண்டியிருக்கும்” என வைரமுத்து கூறினார்.

மேலும், “ஒரு நாள் பார்த்தால் பெண்களுக்கு இலவச பயணம், மறுநாள் பார்த்தால் பெட்ரோல் விலை குறைப்பு, ஒரு நாள் பார்த்தால் 7.5 இடஒதுக்கீடு, மறுநாள் பார்த்தால் இலவச கட்டடம். ஒரு நாள் இந்தியாவிலேயே உயர்ந்த அலோசனைக் குழு, மறுநாள் ஆலையத்தில் தமிழ். இப்படி தினந்தோறும் ஒரு புதிய சாதனை.

நேற்று ஓடிய தண்ணீர், இன்றும் ஓடிக்கொண்டிருந்தால் அதன் பெயர் நதியல்ல; இன்று ஓடுகிற தண்ணீர் புதிதாக ஓடினால் தான் அதற்கு பெயர் நதி.

தினம் ஒரு சாதனை புதிதாக இருந்தால்தான் அதன் பெயர் அரசு. அந்த அரசியல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நெஞ்சில் ஏந்தி செயல்பட்டிருக்கிறார். எப்படி வந்தது இந்த குணம்? எவன் ஒருவனுக்கு கொள்கை பிடிவதம் இருக்கிறதோ அவனுக்கு தான் சாதிக்க தெரியும்.

அந்த கொள்கை பிடிவாதம் எப்படி வந்தது என்பதை இந்த நூலில் கண்டுபிடித்தேன். முதலமைச்சர், அண்ணா, 16 வயது இளைஞன்.. அண்ணா உங்களுக்கு பாராட்டு விழா நிகத்த வேண்டும் என்று கேட்கிறார். எனக்கு உடல் நலம் சரியில்லை தம்பி, பிறகு வா என்றார் அண்ணா. இல்லை, நான் கேட்கிற தேதியில், நான் கேட்கிற இடத்திற்கு நீங்கள் வந்தால் நான் மகிழ்ச்சியடைவேன் என்றார் அந்த இளைஞன்.

அப்போது அண்ணா சொன்ன வார்த்தை, கல்வெட்டில் பதிக்க படவேண்டிய வார்த்தை. அதைத்தான் என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக கருதுகிறேன் என்று எழுதியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பிடிவாதத்தில், உன் அப்பனை மிஞ்சிவிடுவாய் போல இருக்கிறதே என அண்ணா கூறியிருக்கிறார். அண்ணா சொன்ன அந்த பிடிவாதம்தான் இவரை இந்த உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

இன்னொன்று, என்னை போன்றவர்களை அவரை பக்கத்திலிருந்து நேசிப்பதற்கும், மதிப்பதற்கும், அவரை உயர்த்திப் பிடிப்பதற்கும் மிக முக்கியமான காரணம் அவரது மொழிப்பற்று. திராவிட இயக்கத்துடைய கொள்கைகள் ஒவ்வொரு தலமுறையினருக்கும் கடத்தப்பட்டு வருவதற்கான காரணம் அதனுடைய கொள்கைகள்தான்.

அவருடைய மொழி பற்று சாதரணமானது அல்ல. மொழியை நாங்கள் பிடித்துக் கொண்டிருப்பதற்கான காரணம், நான் சொன்னால் ஒரு தமிழ் கவிஞன் சொல்கிறான் என்று ஆகிவிடும், அதனால் நான் அம்பேத்கரை அவர்களை துணைக்கு அழைக்கிறேன். இந்திய முழுவதும் பேசப்படும் மொழி தமிழ் மொழி என்பதற்கு அம்பேத்கர் சாட்சி சொல்கிறார். Tamil or Dravida was not the language of south India, but before aryans came it was spoken all over india, from kashmir to kanyakumari. இதை சொன்னவர் அம்பேத்கர்.

அண்ணா சொன்னால் நிராகரிக்கலாம், பொரியார் சொன்னால் சந்தேகப்படலாம், அம்பேத்கர் சொன்னால்? இந்தியா முழுக்க பேசப்பட்டிருக்க வேண்டிய மொழியை அடித்து துரத்தி ஒரு எல்லைக்குள் மட்டும் சுருக்கியிருக்கிறார்கள். இருக்கும் நிலத்தையும் நாங்கள் விட்டுவிடமாட்டோம், அதற்குதான் இந்த மொழி பற்று.

மிக முக்கியமான செய்தி தோழர்களே, இந்தியா முழுவதும் சமத்துவம் பரவுவதற்கு இந்த கொள்கைகளை கட்டியமைத்து கொடுத்த நமது தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த நூலில் நான் பார்ப்பது என்ன தெரியுமா, அண்ணா, பெரியார், கலைஞர் ஆகிய மூவருடைய திரட்சியாக ஆசைபடுகிறவர் மு.க.ஸ்டாலின் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

திராவிடச் சுடரை ஏந்தி ஓடிக்கொண்டே இருங்கள், நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் இருள் விலகட்டும். வாழ்க நீங்கள், வளர்க உங்கள் தொண்டு, உங்கள் எழுத்து தொடரட்டும். ஆறு பாகம் எழுதினார் கலைஞர், அதையும் தாண்டி ஏழு பாகம் நீங்கள் எழுத வேண்டும்” எனக் கூறி தனது உரையை முடித்துக்கொண்டார் கவிஞர் வைரமுத்து.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹைதராபாத் என்கவுன்ட்டர் போலியானது – விசாரணை ஆணையம் அதிர்ச்சி தகவல்

Halley Karthik

காமன்வெல்த் போட்டி; நீரஜ் சோப்ரா விலகல்?

G SaravanaKumar

வடகறியில் உப்பு… சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மேலாளர்

Arivazhagan Chinnasamy