செய்திகள்

மிசா காலத்தை படமாக எடுக்க வேண்டும் : நடிகர் சத்யராஜ்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ் மிசா காலத்தை படமாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா , பீகார் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ் “ தீவிர எம்ஜிஆர் ரசிகரான நான், தீவிர எம்ஜிஆர் ரசிகரான மு.க. ஸ்டாலினை வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலினை வாழ்த்தினார். தமிழ்நாட்டு மக்களுக்காக நாடாளுமன்றத்தில் சிங்கம் போல கர்ஜித்த ராகுல் காந்திக்கு நன்றி கூறினார்.

கலைஞர் கருணாநிதி தான் ரியல் ஹிரோ , என் மீது இரயில் ஏறினால் உடையும் எலும்புச் சத்தம் டெல்லியில் எதிரொலிக்கும் என்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலைஞர் பேசியதை நினைவுகூர்ந்த நடிகர் சத்யராஜ் மேலும் கலைஞருக்கு சிறைச்சாலையும் ஒன்றுதான், சட்டசபையும் ஒன்றுதான் என்று குறிப்பிட்டார்.

‘பெரியாரின் சமூக நீதியையும் மார்க்சின் பொருளாதார நீதியையும் படித்தால் மட்டுமே ஒருவர் மனிதனாக முடியும்’ என்று கூறிய சத்யராஜ் நான்கு வருடங்களுக்கு முன் எங்களுக்கு பினராயி விஜயனைப் போன்ற முதல்வர் இல்லையே என்று நினைத்தேன் ஆனால் எங்களுக்கு தற்போது சிறந்த முதல்வர் கிடைத்திருக்கிறார் , என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை குறிப்பிட்டார்.

மேலும் மிசா காலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கைதானதை குறிப்பிட்ட பேசிய அவர் மிசாகாலத்தை படமாக எடுக்க வேண்டும் என அந்த மேடையில் தெரிவித்தார். வரும் 2024ம் ஆண்டு மேடையில் இருக்கும் இதே படை வெற்றிபெரும் என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எல்.முருகன் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்: நடிகை கவுதமி!

EZHILARASAN D

சென்னை குறளகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி தொடக்கம்

Web Editor

பட்ஜெட் தொகையில் குளுகுளு பயணம்: வருகிறது எக்கனாமிக் ஏசி வகுப்பு!

Nandhakumar