தவெக அமைச்சரவையில் அதிமுக..? ; எங்கள் முடிவு பரிசீலனை செய்யப்படும் – சிபிஎம்…!

தவெக அமைச்சரவையில் அதிமுகவை சேர்த்து கொள்வது மக்கள் தீர்ப்பிற்கு எதிரானது என்று சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தொடர்ந்து காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் அளித்த ஆதரவை தொடர்ந்து அக்கட்சி ஆட்சியமைத்தது. முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த சூழலில் அதிமுகவில் எடப்படி பழனிசாமி மற்றும் சி.வி. சண்முகம் இடையே உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. சட்டமன்றத்தில் தவெக அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தமிழ் நாடு அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் முதலமைச்சர் விஜய் தவெக ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் தர உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றனர். இதற்கு தவெக-விற்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “தவெகவிற்கு நாங்கள் ஆதரவளித்திருப்பது மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க கூடாது. என்பதற்காகத்தான். அதிமுகவை ஆட்சியில் சேர்த்துக்கொள்வதோ, அமைச்சரவையில் இடம் தருவதோ மக்கள் தீர்ப்புக்கு எதிரானது. இவற்றை மீறி அதிமுகவின் ஆதரவை தவெக பெறுவார்கள் என்றால் எங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.