தஞ்சை ஏசி விபத்து ; உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 3 இலட்சம் நிவாரணம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு…!

தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் தஞ்சை ஏசி விபத்து சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் நேற்று ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டது.

ஏசியை பழுதுபார்க்கும் போது ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த எலக்ட்ரிக் ஊழியர் ரவி ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் ஏ.சி. மெக்கானிக் கணேசன், உணவக ஊழியர் அருண்குமார், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன ஊழியர்களான கதிரேசன், பிரேம், அஜித்குமார் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் தஞ்சை ஏசி விபத்து சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 3 இலட்சமும், பலத்த காயமடைந்த 4 பேருக்கு தலா 1 இலட்சமும், லேசான காயமடைந்த ஒருவருக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.