முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ நூலை வெளியிட்டார் ராகுல் காந்தி
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா இன்று (பிப்.28) நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 23 ஆண்டுக்கால வாழ்கையை சுயசரிதை நூலாக வெளியிடப்படும் என ஏற்கெனவே அவர் அறிவித்திருந்தார்.
இதில் பள்ளி காலம் தொடங்கி, கல்லூரி, அரசியல் தொடக்கம் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். முதல் பாகமாக வெளியிடப்படும் ‘உங்களில் ஒருவன்’ நூலை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி வெளியிட முதல் பிரதியை திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி, கனிமொழி எம்.பி, கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்தியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மேற்குறிப்பிட்ட தலைவர்களுக்கு துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினார்.









