உங்களைத் தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்போம்: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உன்னை என் வழிகாட்டியாக, தலைவராக என்றும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்தார்.   முதலமைச்சர்…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உன்னை என் வழிகாட்டியாக, தலைவராக என்றும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்தார்.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா , பீகார் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியதாவது,


“இந்த விழா சரித்திரம் படைக்கப் போகிறது. தளபதி 13 வயதில் மாணவனாக இருக்கும் போது இளைஞரணியில் திகழ்ந்தார், பிறகு இயக்கத்தில் செயல்வீரனாகத் திகழ்ந்தார், தமிழ்நாடு முழுவதும் பேச்சாளராகத் திகழ்ந்தார், நாடக நடிகராகத் திகழ்ந்தார், சினிமா நடிகராக திகழ்ந்தார், மேயராக திகழ்ந்தார், துணை முதல்வராகத் திகழ்ந்தார், கழகத்தின் செயல் தலைவராகத் திகழ்ந்தார், தற்போது முதலமைச்சராகத் திகழ்கிறார் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பன்முகத் தன்மையைப் பற்றி கூறினார்.

மேலும் தான் ஒரு எழுத்தாளன் என்பதைத் தளபதி இன்று நிரூபித்துள்ளார் என்று கூறிய அவர், நான் எடுத்ததிலிருந்து முடிக்கும் வரை கிழே வைக்காமல் படித்த புத்தகங்களில் இதுவும் எனத் தெரிவித்தார். நான் சிறு வயதிலிருந்தே தளபதியை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். தளபதியின் ஆளுமை, அணுகுமுறை எல்லாவற்றையும் பார்த்து அவர் சாதிப்பார் என்று அப்பொழுதே கணித்தேன் தளபதி சாதிப்பார் என்று.

கலைஞர் அரசியலுக்கு வந்த போது அவருக்கு வயது 14 , தளபதி அரசியலுக்கு வரும் போது அவருக்கு வயது 13 என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், நாங்கள் எவ்வளவு வளர்ந்திருந்தாலும், உன்னை விடப் பெரியவனாக இருந்தாலும் உன்னை என் வழிகாட்டியாக, தலைவராக என்றும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். என் தலைவன் கலைஞரிடத்திலே எப்படி நாங்கள் இருந்தோமோ, எங்கள் மூச்சு இருக்கும் வரை தலைவா உங்களிடம் நன்றியோடு இருப்போம் என உணர்ச்சி ததும்பப் பேசி தன் உரையை முடித்துக்கொண்டார்” துரைமுருகன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.