சென்னை மாநகர மக்களின் வளர்ச்சிக்காக ஸ்டாலின் என்ன செய்தார்: முதல்வர்!

சென்னை மாநகர மக்களின் வளர்ச்சிக்காக ஸ்டாலின் என்ன செய்தார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை சேப்பாக்கம் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,…

சென்னை மாநகர மக்களின் வளர்ச்சிக்காக ஸ்டாலின் என்ன செய்தார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் சென்னைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்ததாகவும், தற்போது 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர்கோட்டம் சுதந்திரதின பூங்காவின் முன்பாக, ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பூவுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சென்னை மாநகர மக்களின் வளர்ச்சிக்காக ஸ்டாலின் என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார். சினிமாவை போல அரசியலிலும் குஷ்பூ நட்சத்திரமாக ஜொலிப்பதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சாதனைகளால் இந்தியாவை உலக நாடுகளே திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரதமர் மோடி என்றும் புகழாரம் சூட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.