ராமநாதபுரம் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்தும், மகளிர் சுய உதவிக்குழுவினர் மேம்பட சுழல் நிதி வழங்குவோம் என்று கூறியும் வாக்கு சேகரித்தார்.
ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், காஞ்சிரங்குடி மற்றும் லெட்சுமிபுரம் உட்பட பல கிராம பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்போது பேசிய காதர்பாட்சா முத்துராமலிங்கம், காஞ்சிரங்குடியில் உயர்தர நூலகம் அமைக்கவும், லட்சுமிபுரம் பகுதி மக்களுக்கு இலவச பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும், மக்களின் கோரிக்கையான நியாய விலை கடைகளை அமைத்து தருவேன் என்று கூறியும் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வாக்கு சேகரித்தார்.







