முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் இருந்து கொரோனா சிகிச்சை பணிக்களுக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேரடியாகவும், இணைய வழியாகவும் இதுவரை 69 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து ரெம்டெசிவிர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காக 25 கோடி ரூபாய் ஒதுக்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை, ரயில் மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்கவும் 25 கோடி ரூபாய் செலவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.







