தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தொடர்ந்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அளித்த ஆதரவினால் அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ் நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த அமுதா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு அப்பொறுப்பில் முன்னாள் தலைமை செயளாலர் முருகானந்தம் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல நிதித்துறை செயலாளராக இருந்த உதயச்சந்திரனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு அந்த பதவியில் சித்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சுற்றுலா வளர்ச்சி, கலாச்சாரத்துறை செயலாளராக ஸ்வர்ணாவும், டாஸ்மாக் மேலாண் இயக்குனராக நந்தகுமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.







