தமிழ் நாடு அரசு கொறடாவாக தவெக எம்.எல்.ஏ சபரிநாதன் நியமனம்…!

தமிழ் நாடு அரசின் தலைமை கொறடாவாக தவெக எம்.எல்.ஏ சபரிநாதன் நியமனம் செய்ப்பட்டுள்ளார்.

தமிழ் நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10 ஆம் தேதி பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நடைபெற்றது.

தொடர்ந்து இன்று சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரும் துணை சபாநாயகராக ரவிசங்கரும் பதவியேற்றனர்.

இந்த நிலையில் தமிழ் நாடு அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த சபரிநாதன்..?

தவெக தலைவர் விஜயின் ஓட்டுனரான ராஜேந்திரனின் மகன் தான் சபரிநாதன். இவர் 21 வயதில் விஜய் மக்கள் இயக்கத்தில் சேர்ந்தார். தொடர்ந்து கட்சி ஆரம்பித்த விஜய் சபரிநாதனுக்கு தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை வழங்கியிருந்தார்.

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட சபரிநாதன் 76,092 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.