கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 46 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றார். அவருடன் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.







