முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு புழல் சிறையில் 70 மரக்கன்றுகள் நடப்பட்டன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கடந்த 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் 700 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் ஒரு பகுதியாக, சென்னை புழல் மத்திய சிறையில், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி, சிறை வளாகத்தில் மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார். மொத்தம் 70 மரக்கன்றுகள் நடப்பட்டன. ஒவ்வொரு மரக்கன்றுக்கும் சிறைவாசிகளின் பெயர் வைக்கப்பட்டு, அவர்களே அதனை வளர்த்து பராமரிக்க அறிவுரை வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : கொங்கு மண்டலத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்த திமுக
இந்த நிகழ்ச்சியில், சென்னை சரக டிஐஜி முருகேசன், தலைமையிட டிஐஜி கனகராஜ்
மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரேன், கிருஷ்ணராஜ், சிறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
– ம. ஸ்ரீ மரகதம்