தாய்மாமன் தங்க மோதிரம் திட்டததை தொடங்கி வைப்பதற்காக மதுரைக்கு சென்ற முதலமைச்ச்ர விஜய்க்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கூட்டரங்கில் முதலமைச்சர் விஜய் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரங்களை வழங்கி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர ஓவ்வொரு குழந்தையையும் தூக்கிக் கொஞ்சி விளையாடினார்.
இதனைத்தொடர்ந்து காந்தி அருங்காட்சியகத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் அங்கு மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், நிர்மல்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




