குழந்தைகள் தினம் : மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் நாளை (நவ. 14) குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதற்காக ரூ.9.27 கோடியில் டெண்டர் விடப்பட்டு, கேக்குகள் தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேக்கும் 45 கிராம் எடையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 கேக் துண்டுகள் வழங்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 2.90 லட்சம் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், குழந்தைகளுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை கொளத்தூரில் உள்ள அரசு பள்ளியில் முதலமைச்சர் விஜய் குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.