வரும் 12-ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார்.
டெல்டா பாசனத்திற்காக, வரும் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், வரும் 12-ம் தேதி மேட்டூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உள்ளார்.
மேலும், திருவாரூருக்கு பயணமாகும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து, திருக்குவளையில் உள்ள தந்தை கருணாநிதியின் இல்லத்தில், அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக மு.க.ஸ்டாலின் திருவாரூர் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.







