நிலையான வளர்ச்சி இலக்கில் தமிழ்நாடு 2-வது இடம்!

நாட்டில் 2020-2021 நிதியாண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மத்திய திட்ட ஆணையத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண்…

நாட்டில் 2020-2021 நிதியாண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

மத்திய திட்ட ஆணையத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் அடிப்படையில், ஆண்டுதோறும் மாநிலங்களைத் தரவரிசைப்படுத்தி வருகிறது.சமூகவியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றம் மதிப்பிடப்பட்டு இந்த தரவரிசை உருவாக்கப்படுகிறது.

அந்தவகையில், கடந்த 2020-2021 நிதியாண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் பட்டியலை நிதி ஆயோக் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 75 புள்ளிகள் பெற்று கேரளா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 74 புள்ளிகள் பெற்று தமிழ்நாடு, இமாசலப் பிரதேசம் இரண்டாம் இடம் பிடித்துள்ளன.

மிசோரம், அரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் முந்தைய நிதியாண்டில் பின்தங்கி இருந்தன. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளன. அதேநேரம், பீகார், ஜார்க்கண்ட், அசாம் ஆகிய மாநிலங்கள் மிகக்குறைவான புள்ளிகள் பெற்று கடைசி இடம் வகிக்கின்றன. யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் 79 புள்ளிகள் பெற்றுத் தொடர்ந்து முதலிடத்திலும், 68 புள்ளிகளுடன் டெல்லி 2-ம் இடத்திலும் உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.