முக்கியச் செய்திகள் உலகம்

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவ வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தொடர்ந்து ஆறு வாரங்களாக உலகளவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறினார். நான்கு வாரங்களாக இறப்பு எண்ணிக்கையும் சரிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். தடுப்பூசி போடும் பணிகளில், உலக நாடுகளிடையே ஏற்றத் தாழ்வுகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேற்கத்திய நாடுகளில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக டெட்ரோஸ் அதானோம் குறிப்பிட்டார். மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் தடுப்பூசி வழங்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார். உலகம் முழுவதும் பரவலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால் மட்டுமே, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தொற்று பரவலை குறைக்க முடியும் எனவும் டெட்ரோஸ் அதானோம் கூறினார்.

அமெரிக்காவில் தேவைக்கு அதிகம் உள்ள 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை மற்ற நாடுகளுக்கு வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

அவர் பெயர் ஜடேஜா… ரவீந்திர ஜடேஜா!

Ezhilarasan

ஜூன் 14ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

Ezhilarasan

ஒரே நாளில் 11, 416 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகம்!

Karthick