தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக விகே சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த, விகே சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது;
தற்போது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. அண்ணா திமுக அப்படியே தான் உள்ளது எங்கேயும் போய் விடாது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைத்து தரப்பும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்பார்கள். அதற்கான முயற்சிகளை சசிகலா மேற்கொண்டு வருகிறார்கள். அது விரைவில் நிறைவேறும். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இரண்டு பேரையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்பது தான் சசிகலாவின் எண்ணம். தற்போது ஒன்றாக இணைவதற்கு வாய்ப்பில்லை என்று பேசிக் கொண்டிருப்பவர்கள் ஒரு கட்டத்தில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்து ஒரு சுமூக முடிவு வருவதற்கு உண்டான காலச் சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. அதனால்தான் இன்னமும் ஓபிஎஸ் அவர்களை சந்திக்கவில்லை.
தற்போது ஆராய்ச்சி கல்வியில் இருப்பதால் செந்தில் பாலாஜி விவகாரத்தில் நான் அதிக கவனம் செலுத்தவில்லை. தற்போது இதை கவனிக்காமல் ஒதுங்கி இருப்பது தான் நல்லது. அனைவரின் மேல் குற்றச்சாட்டு சொல்வது அரசியலில் . இதெல்லாம் அரசியல் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான். ஆளுநருக்கும் அரசிற்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளதால் கல்வி கற்கும் மாணவர்கள் குறிப்பாக பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் பட்டம் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா







