சென்னை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரிப்பன் கட்டடத்தில் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு இதற்கு முன்பு இருந்த பெயர் மெட்ராஸ் அல்லது மதராஸபட்டினம் ஆகும். ஆங்கிலேயர் ஆட்சியில் மெட்ராஸ் மாகாணத்தின் தலைநகரமாகச் சென்னை விளங்கியது. மெட்ராஸ் மாகாணம் என்பது கிட்டத்தட்ட இன்றைய தென்னிந்தியாவை உள்ளடக்கியது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, சென்னை நகரத்தின் பிறந்தநாளை சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தனது 384 ஆவது பிறந்த நாளை சென்னை கொண்டாடுகிறது.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில், சென்னை பள்ளி மாணவர்களின் “அக்கம் பக்கம்” புகைப்படக் கண்காட்சியையும், “தி இந்து” குழுமத்தின் சார்பில் சென்னையின் முக்கிய நிகழ்வுகள், இடங்கள் அடங்கிய ஆவணப் புகைப்படங்களின் கண்காட்சியையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்து தமிழ் நாளிதழ் சார்பில் சென்னையின் 60 க்கு மேற்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து தி இந்து குழுமத்தின் மூன்று புத்தகங்களை முதல்வர் வெளியிட்டார்.
2.தமிழ்நாடு இன் ஃபோக்கஸ்: கல்ச்சர் அண்ட் சொசைட்டி: பாலிடிக்ஸ் அண்ட்
கவர்னன்ஸ்
3.பயணியர்ஸ் ஸ்டார்ஸ் இன் தி மெட்ராஸ் கேலக்ஸி
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு , மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








