“தூத்துகுடி மாவட்டம் ஏரல் பகுதிக்கு நாளைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும்!” – மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அறிவிப்பு!

கனமழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஏரல் பகுதிக்கு நாளைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும் என மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17…

கனமழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஏரல் பகுதிக்கு நாளைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும் என மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தென் மாவட்டங்களின் சில பகுதிகள் இன்னமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக,  அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையே நீடித்து வருகிறது.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் ஏரல், காயல்பட்டினம் போன்ற பகுதிகளில் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதிகளில் நாளை மாலைக்குக்ள் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் என மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் டேவிட் ஜெபஸ்டின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

”ஏரல் பகுதிகளில் மட்டும் 600 மின்வாரிய பணியாளர்கள் பணி செய்துவருகிறார்கள். அப்பகுதிகளில் உடைந்த மின்கம்பங்கள், ட்ரான்ஸ்பார்மர்களை சரி செய்யும் பணி வேகமாக நடைபெற்றுவருகிறது.

தண்ணீர் வடிந்த குடியிருப்பு பகுதிகளில் மட்டும் நாளை மின்சாரம் வழங்கப்படும்.”

இவ்வாறு மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.