“மேகதாது விவகாரத்தில் ஏகப்பட்ட சட்ட சிக்கல்கள் உள்ளது” – அன்புமணி!

மேகதாது விவகாரத்தில் ஏகப்பட்ட சட்ட சிக்கல்கள் இருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “பெங்களூரு குடிநீர் தேவைக்கு இவ்வளவு டிஎம்சி தண்ணீர் வேண்டுமா? ஐந்து டி.எம்.சி தண்ணீர் தேவைக்கு 70 டிஎம்சி அணை கட்ட முயற்சிக்கிறார்கள்? கர்நாடக மாநிலத்தில் 1974 ஆம் ஆண்டு காவிரி பாசனம் மூலமாக 6.7 லட்சம் ஏக்கர், 1990 ஆம் ஆண்டு 12 லட்சம் ஏக்கர் மற்றும் 2016 ஆம் ஆண்டு 21 லட்சம் ஏக்கர் என அதிகரித்து வருகிறது.

ஆனால் தமிழகத்தில் 29 லட்சம் ஏக்கர் பாசனத்திற்கான நிலமாக இருந்த நிலையில் தற்பொழுது
20 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. தமிழகத்தில் பாசனத்திற்கான நிலம் குறைந்துள்ளது, கர்நாடகாவில் அதிகரித்துள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டு விட்டால் கர்நாடகாவில் பாசனத்திற்கான ஏக்கர் 30 லட்சம் ஆகும்; தமிழகத்தில் 10 லட்சம் ஆகவோ குறைந்துவிடும்.

மேகதாது அணை கட்டப்பட்டு விட்டால் தமிழகத்தின் வாழ்வாதாரம் அனைத்தும் அழிந்துவிடும். காவிரி மூலமாக 60 சதவீதம் நெல் விவசாயம் செய்து வருகிறது. 12 லட்சம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு அணை கட்டப்படும்; இங்குள்ள மான், கரடி என அரிய வகை உயிரினங்கள் அனைத்தும் அழிந்துவிடும். கர்நாடகா மேகதாது அணை கட்டிவிட்டால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். தமிழக சட்டமன்றத்தில் மேகதாது அணை விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மேகதாது நடுவர் மன்றம் கொண்டு வருவது குறித்து திருத்தம் செய்யப்பட்டது. இது தமிழகத்திற்கு தவறான முடிவு. மேகதாது நடுவர் மன்றம் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

மேகதாது அணையே கொண்டு வரவில்லை; முதல் அடியே வைக்காதபோது, இப்படி இரண்டாவது அடியாக மேகதாது நடுவர் மன்றத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியும். தமிழக சட்டமன்றத்தில் மேகதாது விவகாரத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். மேகதாது விவகாரத்தில் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தமிழக அரசு சார்பாக தொடர வேண்டும்.

தண்ணீருக்காக மேகதாது அணைக்கொண்டு வருவதாக கூறுகிறார்கள்; பாசனத்திற்காக கொண்டுவரப்பட்டால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. முதல்வர் சிவகுமார் தொகுதியில் தான் அணை கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேகதாது விவகாரத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; அதைப்பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அங்கு அணை கொண்டு வரப்பட்டுவிட்டால் அடுத்த தேர்தலுக்கு அதிகம் வெற்றி பெற்று விடலாம் என்று செய்கிறார்கள். அடுத்தடுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவே இந்த விவகாரத்தில் முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.

மேகதாது விவகாரத்தில் ஏகப்பட்ட சட்ட சிக்கல்கள் இருக்கிறது; எளிதாக கட்ட முடியாது. ஆனால் தற்பொழுது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். மத்தியில் இருக்கும் அரசு, தமிழகத்திற்கு ஆதரவளிக்காது கர்நாடகவிற்கு தான் ஆதரவளிக்கும். காடுகளை அழித்தால் மழை கூட வராமல் போய்விடும். கர்நாடக கொடுக்கும் இடத்தில் இருக்கிறது. தமிழகம் வாங்கும் இடத்தில் இருக்கிறது. என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், அதனால் தடுக்க முடியாது.

ராசிமணல் பகுதியில் அணை கட்டினால் 20 சதவீதம் தான் தண்ணீர் கிடைக்கும்; கர்நாடகவிற்கு 80 சதவீதம் தண்ணீர் கிடைக்கும். ராசி மணல் பகுதியில் அணை கட்டினால் பாதிப்பு ஏற்படும் இரண்டு அரசுமே அணை கட்டக்கூடாது. சட்டமன்றத்தில் மேகதாது விவகாரத்தில் திருத்தம் கொண்டு வந்தது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தான். திருத்தம் கொண்டு வந்தால் வாக்கெடுப்பு எடுக்க வேண்டும்; அதை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.