அதிமுகவில் இருந்து விலகி பலர் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். மாமல்லபுரத்தில் நடைபெறும் இணைப்பு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் தவெகவில் இணைய உள்ளனர்.
இந்த நிலையில், பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற ‘வாஷிங்மெஷின்’ ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற ‘வாஷிங்மெஷின்’ ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கரைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே… உண்மையா”? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




