முக்கியச் செய்திகள் கொரோனா செய்திகள்

சென்னைக்கு வந்த 13-வது ஆக்சிஜன் ரயில்!

சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக 13-வது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்தது.

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் வடமாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகின்றன. இதுவரை மேற்கு வங்கம் தாராபூர், ஜார்கண்ட், ஜம்ஷெட்பூர், மகாராஷ்டிரா, ஒடிசா பகுதிகளில் இருந்து கண்டெய்னர் பெட்டிகளில் ஆக்ஸிஜன் ஏற்றி வந்துள்ள நிலையில் இன்று ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியிலிருந்து 2 கன்டெய்னரில் 43 டன் ஆக்சிஜன் முழுவதும் நிரப்பப்பட்டு 13 வது சிறப்பு ரயில் தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி-க்கு வந்தடைந்தது.

இங்கிருந்து சாலை மார்க்கமாக ராஜீவ் காந்தி, ஸ்டான்லி மருத்துவமனை ,ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 746 டன் ஆக்சிஜன் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை!

Jayapriya

மெரினாவில் குவியத் தொடங்கிய குப்பைகள்: தூய்மை பணி தீவிரம்!

Jayapriya

மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Karthick