கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில்குமார் சஸ்பெண்ட்!

சக மல்யுத்த வீரரை கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மல்யுத்த வீரர் சுஷில் குமாரை. பணியில் இருந்து இந்தியன் ரயில்வே சஸ்பென்ட் செய்துள்ளது. பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், சக வீரரான…

சக மல்யுத்த வீரரை கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மல்யுத்த வீரர் சுஷில் குமாரை. பணியில் இருந்து இந்தியன் ரயில்வே சஸ்பென்ட் செய்துள்ளது.

பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், சக வீரரான சாகர் தான்கருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில், டெல்லி சத்திராசல் விளையாட்டு அரங்கில், சாகர் தன்கட்டை, சுஷில் குமாரும் அவரது நண்பர்களும் கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். பலத்த காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களை தேடி வந்தனர். சுஷில் குமாருக்கும் அவரது நண்பர்களுக்கும் லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதனால் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் தலைமறைவாக இருந்தனர். அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர். இந்நிலையில், டெல்லி தனிப்படை போலீசார் சுஷில் குமாரை கைது செய்தனர். இவர், ஒலிம்பிக் போட்டிகளில் 2 முறை பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷில் குமார் வடக்கு ரயில்வேயில் மேலாளராக பணியாற்றி வந்தார். அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.