முக்கியச் செய்திகள் தமிழகம்

தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட கார்த்தி!

நடிகர் கார்த்தி தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு தன் ரசிகர்களுக்கு கடிதம் வெளியிட்டுள்ளார்.

பருத்தி வீரன் மூலம் தமிழ் திரையுலக்கிற்கு அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார் நடிகர் கார்த்தி. ‘உழவன் ஃபவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக நற்பணிகளை மேற்கொண்டுவருகிறார். மேலும் சமீபத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயை தனது குடும்பத்தினருடம் சேர்ந்து அளித்துள்ளார்.

இந்த நிலையில் கார்த்தி தனது 44வது பிறந்தநாளை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ரசிகர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில்,

அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்!

இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது. அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, ‘மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி, தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்’. இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும் என கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பாடப் புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கியது தமிழ்நாடு அரசு

Halley karthi

குடியரசுத் தலைவர் சிறப்பு அறைக்கு மாற்றம்!

Ezhilarasan

மக்களை மகிழ்விக்கும் வகையில்தான் சுல்தான் படம் உருவாக்கபட்டுள்ளது: நடிகர் கார்த்தி

Halley karthi