முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி!

தமிழகத்தில் நாளை மறுதினம் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக்கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த கிருஷ்ணசாமி, சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக அந்த மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம், ஏப்ரல் 20ஆம் தேதி, தாம் புகார் அளித்ததாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தமது மனுவில் கிருஷ்ணசாமி தெரிவித்திருந்தார். பணப்பட்டுவாடா தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பாக நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க, உயர்நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ முடிவெடுக்க முடியாது, எனத் தெரிவித்த நீதிபதிகள், கிருஷ்ணசாமியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement:

Related posts

தடுப்பூசி செலுத்தப்பட்ட 6 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சுகாதார பணியாளர்!

Jayapriya

“வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வர எதிர்க்கட்சியினர் மறுக்கின்றனர்” – முதல்வர் பரப்புரையில் பேச்சு

Saravana Kumar

செங்கல்பட்டில் பாதிப்புகளை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியரின் காரை வழிமறித்து பொதுமக்கள் வாக்குவாதம்!

Saravana