தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்த முடிந்த நிலையில், அடுத்த மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்துள்ளார்.
பின்னர், செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்தும் மே 2ம் தேதி அன்றுதான் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
மேலும் அதற்கு முன்னதாக மே 1-ம் தேதி அன்று தபால் வாக்குகள் வைத்து சீல் வைக்கப்பட்ட சிறப்பு அறையை திறந்து வாக்கு என்னும் பணிகளில் ஈடுபட கூடாது என வலியுறுத்தியதாக கூறினார். மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி வாக்கு என்னும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் தபால் வாக்கு எண்ணும் முறையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.







