கொரோனா பரவலைத் தடுக்க 200 கிராமங்களுக்கு சீல்!

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக சுமார் 200 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும்…

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக சுமார் 200 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக, 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1,87,62,976 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் 2,97,540 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,53,84,418 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பி வருகின் றனர். அவர்களால் புதிதாகக் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாகவும் வெளியாட்கள் வருவதைத் தடுக்கவும், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டல்கண்ட், மால்வா மற்றும் மத்திய பிராந்தியத்திலுள்ள சுமார் 200 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

வெளியூர்களில் பணியாற்றிவிட்டு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக, கிராமத்துக்கு வெளியே அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹோஷன்காபாத் மாவட்டத்தில் மட்டும் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, 130 கிராமங்களுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.