முக்கியச் செய்திகள் தமிழகம்

காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம்!

சென்னை காசிமேட்டில் சமூக இடைவெளியின்றி மீன் வாங்க குவிந்தவர்களால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொற்றை கட்டுப்படுத்தும்விதமாக இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகள் அரசு அறிவித்தது.

அதன்படி நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில் நாளையும் இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை காசிமேட்டில் இன்று அதிக அளவில் மீன் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். அதே சமயம் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியின்றியும் குவிந்ததால் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது.

Advertisement:

Related posts

ஆக்சிஜன் டேங்கர்கள் தேவை: டெல்லி அரசு உருக்கமான விளம்பரம்

Karthick

மீண்டும் கொரோனா: தமிழகத்தில் 24மணி நேரத்தில் 1066 பேர் பாதிப்பு

Niruban Chakkaaravarthi

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு!

Gayathri Venkatesan