முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அறநிலையத்துறை செலவுகளை கோவில் நிதியியிலிருந்து செலவழிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிதியில் கல்லூரிகள்
துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவில் நிதியை தவறாக பயன்படுத்துவதை
எதிர்த்தும் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும்
ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, மனுதாரர், கோவில் நிதியில் அறநிலையத் துறை ஆணையர், இணை ஆணையர்கள், ஆய்வாளர்கள் அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், முந்தைய ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்கவும், கணினிமயமாக்கவும், பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கும், மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டவும்
பயன்படுத்தப்படுவதாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை
சமர்ப்பித்தார்.

கோவில்களை நிர்வகிப்பதற்காக நிர்வாகக் கட்டணமாக மொத்த வருமானத்தில் 12
சதவீதம் வழங்கப்படும் நிலையில், கோவில் நிதியை அறநிலையத்துறைக்காக
பயன்படுத்துவதாகவும், எந்த தயக்கமும் இல்லாமல் கோவில் நிதியை அரசு நிதி போல
பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

சிறப்பு தணிக்கை செய்தால் அத்தனை விஷயங்களும் அம்பலத்துக்கு வரும் எனவும்
தெரிவித்தார்.

இதையடுத்து, கோவில் நிதி, தேவையில்லாமல் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த
முடியாது எனவும், அறநிலையத் துறை செலவுகளுக்கு தொகுப்பு நிதியில் செலவழிக்க
வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை
கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது எனவும், கண்காணிப்பு என்ற பெயரில்
கோவில் வளங்களை எடுக்க முடியாது எனவும் கூறி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 8 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கால்சியம் பற்றாக்குறையால் படுத்த படுக்கையான சிறுவர்கள் – அரசின் உதவியை நாடும் குடும்பம்

EZHILARASAN D

ரோடு ரோலரை திருடி இரும்புக் கடையில் விற்கத் திட்டம்: போலீசார் அதிர்ச்சி

Gayathri Venkatesan

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி: தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் முக்கிய உத்தரவு!

Jeba Arul Robinson