திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில், பசுமை வீட்டிற்கு மின் இணைப்புக்கான பைப் லைன் அமைக்க ஒப்பந்ததாரர் பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் வசித்து வரும் இருளர் இன மக்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாக அண்மையில் நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் எதிரொலியாக, இப்பகுதியில் வசிக்கும் இருளர் இனத்தைச் சேர்ந்த 9 குடும்பங்களுக்கு, வீடுகள் கட்டித் தர தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் மாவட்ட நிர்வாகம் இலவச வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த பசுமை வீடுகளுக்கு, மின் இணைப்புக்கான பைப்லைன் அமைப்பதற்கு ஒப்பந்ததாரர் ரூ.3,200 பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இருளர் இன மக்கள் அவரிடம் புகார் தெரிவித்தனர். அதனை ஏற்று ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். தொடர்ந்து ஜோலார்பேட்டை ஒன்றியத் தலைவர் சத்யா சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.