திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுரை வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம் கோலகலத் துவங்கியது. தெலங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கலந்து கொண்டு தேரை இழுத்து தேர் பவணியை துவக்கி வைத்தார்.
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுரை வடிவுடையம்மன் கோயிலில் பத்து நாட்கள் பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். இக்கோவிலில் கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்திரசேகர் திருத்தேர் உற்சவம் காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. கைலாய வாத்தியங்கள் மற்றும் சங்க நாதம் முழங்க , 42 அடி உயரமுள்ள தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர். பள்ளி மாணவர்கள் சிவன், பார்வதி, முருகர் உள்ளிட்ட சுவாமி வேடமணிந்தும், பஜனைகள் பாடியும், சிவாச்சாரியார்கள் நடனமாடியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நான்கு மாட வீதிகள் வழியாக சென்று, மீண்டும் சன்னதி தெருவில் உள்ள கோயிலை தேர் வந்தடைந்தது. இதை தொடர்ந்து முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் 6-ம் தேதி நடக்கிறது. 8-ம் தேதி இரவு 18 திருநடனம், தியாகராஜர் பந்தம் உற்சவத்துடன் விழா நிறைவுறுகிறது. இந்நிகழ்வில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேர் பவணியை துவக்கி வைத்தார். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் பவணியில் கலந்து கொண்டனர்.
அனகா காளமேகன்







