காவல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க யோகா நிகழ்ச்சி

புதுச்சேரியில் கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று காவலர்கள் தற்கொலை செய்து கொண்டதால் போலீசாரின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக மாஹோவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் காவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். புதுச்சேரியில் கடந்த…

புதுச்சேரியில் கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று காவலர்கள் தற்கொலை செய்து கொண்டதால் போலீசாரின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக மாஹோவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் காவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்தில் வெவ்வேறு காவல் நிலையத்தில் பணியாற்றி
வந்த மூன்று காவலர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்கள்.

இதனைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என புதுச்சேரி காவல் துறை அறிவுறுத்தியிருந்தது.

இதனடிப்படையில் கேரளா அருகே உள்ள புதுச்சேரி பிராந்தியம் மாஹே பகுதியில் உள்ள
போலீசாருக்கு மஞ்சக்கால் படகு குழாம் அருகே மன அழுத்தத்தை குறைக்கும் யோகா
பயிற்சி கற்றுக்கொடுக்கப்பட்டது. இதில் மாஹே முதுநிலை காவல் கண்காணிப்பாளர்,
ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து காவலர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர். மேலும்
உளவியல் நிபுணர்களின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.