சென்னையில் ஆன் லைன் ரம்மி விளையாடி 16 லட்சம் ரூபாய் இழந்த நபர் மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சுரேஸ். இவருக்கு அம்மு என்ற மனைவியும் இரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் சுரேஸ் கடந்த இரண்டு தினங்களாக ஆளை காணவில்லை என அவரது மனைவி அம்மு கே.கே. நகர் காவல் நிலைதத்தில் புகார் அளித்திருந்தார்.
அண்மைச் செய்தி : சென்னையில் மது அருந்தி வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.5 கோடி அபராதம் வசூல்
இந்த நிலையில் சுரேசின் உடல் மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.இதனை கைப்பற்றிய மெரினா போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து இராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று சுரேசின் மனைவி அம்மு தனது கணவர் தான் அடையாளம் கண்டு இறந்த நபர் சுரேஸ் தான் என ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து சுரேசின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்த சுரேஸ் கடந்த சில வருடங்களாக ஆன் லைன் ரம்மி விளையாடி தற்போது வரை 16 லட்சம் ரூபாய் இழந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த்தாக கூறப்படுகிறது. இதனால்தான் சுரேஸ் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன் லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என் அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர்.







