கொரோனா தொற்று இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி, கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அதிக வாய்ப் புகள் இருந்ததாகக் கூறினார். ஆனால் மத்திய அரசு அலட்சியம் காட்டியதால் கொரோனா தொற்று அதிகம் பேருக்கு பரவி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி, மௌனம் காப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டிப்பதாகவும் குறிப்பிட்டார்.
தடுப்பூசிக்கு மாறுபட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறித்து நீதிமன்றமே கேள்வி எழுப்பியதையும் அவர் சுட்டி காட்டினார். அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மாநில அரசுக்கு மத்திய அரசு 150 ரூபாய் விலைக்கு வழங்க வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார்.







